Thursday, September 1, 2011

Aabathsahayeswarar Temple at Aduturai near Kumbakonam

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
தல வரலாறு:
இதிகாச மாகிய இராமயணத்தில் வரும் இராம பக்தன். இவன் தென் குரங்காடுதுறையை அடைந்து சிவபெருமானை வழிபட்டு வரும் நாளில், பகைமை காரணமாகச் சுக்ரீவனைத் தேடிக் கொண்டு வாலி வந்தான்.
மிகவும் வல்லமை படைத்த அந்த வாலிக்கு அஞ்சிய சுக்ரீவன் ஆடுதுறை அரவச்சடை அந்தணனாகிய அரனை அடைக்கலம் புகுந்து நின்று தன்னைக்  காப்பாற்றியருளுமாறு வேண்டிக் கொண்டான். அப்போது சிவபிரான் சுக்ரீவன் அன்னப் பறவையாகவும் அவன் தேவியைப் பாரிஜாத மரமாகவும் (பவள மல்லிகை மரம்) வேற்றுருக் கொள்ளச் செய்து காப்பாற்றியருளினான்.
சுக்ரீவனுக்கு வந்த ஆபத்தைப் போக்கியருளி அவனுக்குச் சகாயம் செய்தமையால், இறைவன் ஆபத்சகாயேசுரர் எனவும், துன்பத்தில் துணைவர் எனவும் வழங்கப்படுகின்றார். அம்மையின் திருநாமம் பிரபாளவல்லி என்றும் பவளக்கொடி என்றும் வழங்கப்படுகிறது.
சூரியபூசை : ஒவ்வோர் ஆண்டும் சித்திரைமாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது பட்டுத் தழுவுகின்றது. இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் சித்திரைமாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது பட்டுத் தழுவுகின்றதது

முகவரி:அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறை அஞ்சல் 612 101. திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.  

போன்: +91 - 94434 63119, 94424 25809

No comments:

Post a Comment