Saturday, September 17, 2011

Agastyar Temple at Agastyampalli (Tirutturaippoondi) near Vedaranyam (Paadal Petra Stalam)

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:அகத்தீஸ்வரர்
அம்மன்:மங்கை நாயகி, பாகம்பிரியாள்

 பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
தேவாரபதிகம்:
ஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண்பொரு ளாகிமெய்ச் சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும் ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.
-திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 126வது தலம்.

தலபெருமை:எமன் வழிபட்ட சிறப்புடையது.
இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசை பார்த்து உள்ளன.

தல வரலாறு:கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் திரண்டிருந்தனர். இதனால் வடதிசையிலிருந்த கைலாயம் தாழ்ந்தது. தென்திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த சிவபெருமான் அகத்தியரை அழைத்து, தென்திசைக்கு செல்லும்படி உத்தரவிட்டார்.
சிவனின் ஆணைப்படி அகத்தியர் தென்திசைக்கு சென்றார். செல்லும் வழிகளில் சிவலிங்கப் பிரதிஷ்டைசெய்து வழிபாடு நடத்தினார். அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் அகத்தியருக்கு சிவன் திருமணக்காட்சி தந்து அருளினார். இதனால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் ஆனார். அகத்தியர் திருவுருவம் கோவிலில் உள்ளது.
குலசேகரப்பாண்டியனுக்கு இருந்த வியாதிபோக்க இத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றதாக வரலாறு.

இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

போன்: +91-4369 - 250 012

No comments:

Post a Comment