Saturday, September 10, 2011

Aatmanatheswarar Temple at Tiruvalampozhil (Tirupponthurutti) near Kumbakonam (Paadal Petra Stalam)

அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்
தேவாரபதிகம்
பொல்லாத என்அழுக்கில் புகுவான் என்னைப் புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை எல்லாரும் தன்னையே இகழ அந்நாள் இடுபலி என்று அகம்திரியும் எம்பிரானைச் சொல்லாதார் அவர்தம்மைச் சொல்லா தானைத் தொடர்ந்துதன் பொன்னடியே பேணுவாரைச் செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
-திருநாவுக்கரசர்
 தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 10வது தலம்.
தல வரலாறு:காசிபர், அஷ்டவசுக்கள் வழிபட்டது.
கோயிலில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதிகள் உள்ளது.
இத்தலத்தில் உள்ள வெண் பொற்றாமரைக்குளத்தில் இந்திரன் நீராடி சாப விமோசனம் பெற்றான். நந்தியின் திருமணத்தை சுந்தரருக்கு ஞாபகப்படுத்திய தலம் இது.
இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தலக் கல்வெட்டு இறைவனை ""தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்' என்று குறிக்கிறது.
அப்பரும் தம்  திருத்தாண்டகத்தில் ""தென் பரம்பைக் குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்திநெஞ்சே' என்று பாடியுள்ளார்.
இதிலிருந்து ஊர் - பரம்பைக்குடி என்றும்; கோயில் - திருவாலம்பொழில் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது.
 தல சிறப்பு:இங்கு மூலவர் ஆத்மநாதேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அஷ்டவசுக்கள் பூஜித்த தலம். சப்த ஸ்தானத்தில் ஒன்று. இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தெட்சிணாமூர்த்தியாக உள்ளார்.

திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புதுவஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
போன்:+91 - 4365 - 284 573, 322 290

No comments:

Post a Comment