Friday, September 9, 2011

Aabatsahayeswarar Temple at Tiruppazhanam near Thanjavur (Paadal Petra Stalam)

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:ஆபத்சகாயர்
அம்மன்:பெரிய நாயகி
பாடியவர்கள்:திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
தேவாரபதிகம்:வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப் பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார் நாதா எனவும் நக்கா எனவும் நம்பா எனநின்று பாதந்தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன நகராரே.
-திருநாவுக்கரசர்
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 50வது தலம்


தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்குமுன்பின் இரண்டு நாட்களிலும் நிலா சுவாமியின் மேல்படுகிறது.

தலபெருமை:கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்குண்டு. சந்திரன் வழிபட்ட தலம்.
குபேரன், திருமால், திருமகள், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலம்.
இத்தலம் சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்

  
தல வரலாறு:அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த  இடமாதலால் திருப்பழனம் என்று பெயர்.
ஒரு சமயம் அந்தணச் சிறுவன் ஒருவனை எமதருமன் துரத்திக் கொண்டு வரும்போது அச்சிறுவன் இத்தலத்து இறைவனைச் சரணடைந்தபோது இறைவன் அச்சிறுவனுக்கு காட்சியளித்து ஆபத்தில் உதவி செய்ததால் இறைவனுக்கு ஆபத்சகாயேசுரர் என்று பெயர்.

திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.  பிரார்த்தனை நிறைவேறியதும் இவைறனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
போன்: +91 4362 326 668


No comments:

Post a Comment